பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று முற்பகல் இலங்கை வரவுள்ள அவர் இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவானதன் பின்னர், கடந்த 29 ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.