கொழும்பிலுள்ள இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக வளாகத்தில் தாய் நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் பிரசன்ன உணவு தவிர்ப்பினை முன்னெடுத்துள்ளார்.

இன்று முற்பகல் முதல் அவர் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அலுவலர் ஒருவர் கடத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கடத்தப்பட்டதாக கூறப்படும் அலுலவர், காவற்துறையில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் இந்த உணவு தவிர்ப்பினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.