சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கேமரா ஒன்றை பறக்கவிட்ட நபரொருவர் நுவரெலியா-மீபிலிமான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலிய காவல்நிலைய விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று காலை நுவரெலிய காவல் நிலையத்தில் இருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சேனாநந்த வித்தியாலய பகுதியில் வைத்தே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதுகாப்பு அமைச்சு அல்லது சிவில் விமான சேவை ஆணைக்குழுவின் அனுமதியின்றியே குறித்த நபர் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், குறித்த நபரிடமிருந்த ட்ரோன் கேமரா மற்றும் அதன் உதிரிப்பாகங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.