சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தினை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிலவும் மழையுடனான காலநிலையினால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒன்றிணைந்து இடர் நிலமைகளை தடுப்பதற்கும் உடனடியான நடவடிக்கைகளை எடுத்து நிவாரணங்களை வழங்குவதற்கும் குறிப்பிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வர்த்தமானி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சகல நடவடிக்கைகளும் பிரதமரின் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.