Header image alt text

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணத்தினை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிலவும் மழையுடனான காலநிலையினால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒன்றிணைந்து இடர் நிலமைகளை தடுப்பதற்கும் Read more

எதிர்வரும் இரண்டு வாரத்தில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக ஒட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளது.

இம்முறை பரீட்சையை முன்னிட்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். அதன்படி, 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. Read more

சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கேமரா ஒன்றை பறக்கவிட்ட நபரொருவர் நுவரெலியா-மீபிலிமான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலிய காவல்நிலைய விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று காலை நுவரெலிய காவல் நிலையத்தில் இருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சேனாநந்த வித்தியாலய பகுதியில் வைத்தே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more