Header image alt text

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும். Read more

நிலவும் மழையுடனான காலநிலை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை சீரற்ற வானிலை காரணமாக 4153 குடும்பங்களை சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிலதிப் கொடிபிலி தெரிவித்துள்ளார். Read more

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த தாய்நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவர் நேற்றிரவு இந்த உணவு தவிர்ப்பினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த பெண் அதிகாரி காவற்துறையில் முன்னிலையாகி Read more

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜீ. மெனேல்லா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் ஜனாதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு இத்தாலி அரசாங்கத்தின் வாழ்த்துகளையும் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். புதிய நோக்கோடு முன்னோக்கி பயணிக்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். Read more

முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.

அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை மீளப்பெற்றுக் கொண்டதை அடுத்தே அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகாமையில் இருந்து, இன்று காலை, மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே, யாழ் பொலிஸாரால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்குள் இருந்து மிதிவெடி மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more