இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜீ. மெனேல்லா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் ஜனாதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு இத்தாலி அரசாங்கத்தின் வாழ்த்துகளையும் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். புதிய நோக்கோடு முன்னோக்கி பயணிக்கும் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புதிய செயற்றிட்டங்கள் மூலம் இலங்கை பொருளாதார, சமூக மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி பயணிக்கும் எனவும் அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரெனி ஜொரான்லி எஸ்கேடெல் உள்ளிட்ட தூதுக் குழுவினரும் ஜனாதிபதியை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களும் ஜனாதிபதிக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் இலங்கையின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.