இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த தாய்நாட்டுக்கான இராணுவம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவர் நேற்றிரவு இந்த உணவு தவிர்ப்பினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த பெண் அதிகாரி காவற்துறையில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என கோரி நேற்று முற்பகல் முதல் உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரிடம் அதுரலியே ரதன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகர விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் தனது உணவு தவிர்ப்பினை கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.