நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வந்த அனைத்து தெரிவுக்குழுக்களும் முடிவுக்கு வரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.