முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.

அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை மீளப்பெற்றுக் கொண்டதை அடுத்தே அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட ரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.