யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகாமையில் இருந்து, இன்று காலை, மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே, யாழ் பொலிஸாரால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைக்குள் இருந்து மிதிவெடி மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.