ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தாயகப் பகுதியில் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்களில் ஒன்றான, உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ்,

கடந்த தேர்தல் காலங்களில் அமைப்பின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக செயற்பட்ட புதுக்குடியிருப்பு, தேராவில் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு, அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், அரை ஏக்கர் மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிக்கான தூவல் நீர்ப்பாசனத் தொகுதி ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு வாழும் அக்குடும்பத்தின் கோரிக்கை, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கட்சி நிர்வாகிகளால் பரிசீலிக்கப்பட்டு மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சர்வதேசக் கிளைகளின் உறுப்பினர்கள் இவ்வாறான வாழ்வாதார உதவித் திட்டங்களை கட்சி நிர்வாகத்தின் மூலம் தாயகத்தில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.