யாழ்.கல்வியங்காடு பகுதியில் கேமி குழுவின் தலைவரின் சகோதரனை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டு காயங்களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் வீசியதாக அதனைக் கண்ட அப்பகுதியிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் அந்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய அஜித் இளைஞரே வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலையினால், மற்றைய குழுவினர் கொலை செய்திருக்கலாமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.