Header image alt text

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் எச்.இ.அஹமட் அலி அல் முஅல்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், நேற்று சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற உள்ளதாக உறுதியளித்துள்ளார். Read more

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக நுகேகொடை நோக்கிய ஹைலெவல் வீதியின் வாகன போக்குவரத்து விஜேராம சந்திக்கு அருகில் ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர் தங்கும் விடுதி ஒன்றை பெற்றுத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பணிகளுக்கு, 20 ஆயிரம் பேர் தேவைப்படுகின்ற போதிலும் 13 ஆயிரம் பேர் மாத்திரமே, தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக, ரயில்வே திணைக்களத்தில் திறன் மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

2013ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைப்பாடு காணப்பட்டாலும் தற்போது ரயில்வே திணைக்களத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் நெருக்கடிநிலைத் தோன்றியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. Read more