மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரசாக், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் மற்றும் ஆலோசகரான அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.