இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உண்மையான விடயங்களை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை எதிர்நோக்கிய பெண் அதிகாரியிடம் இருந்து இதுவரையில் எந்தவித தகவலையும் பெறமுடியாமை, இது தொடர்பான விசாரணைகளுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அந்த அதிகாரி கடத்தப்பட்டமைக்கான எந்தவித சாட்சியங்களும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் நாட்டில் உள்ள அனைத்து தூதரக அதிகாரிகளையும் தெளிவுப்படுத்துவற்கு வெளிவிவகார அமைச்சு நேற்று நடவடிக்கை எடுத்திருந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.