Header image alt text

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமது அரசாங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, புதிய நோக்குடன் முன்னோக்கி செல்வும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மிக உயர்ந்த ஆதரவை வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார். Read more

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று நாடாளுமன்றில் சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஒமர் அப்துல் ரஸாக், தூதரக துணைத்தலைவர் திருமதி கதீஜா நஜீஹா மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். Read more

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தின் இணைப்பு அதிகாரிக்கும் விசாரணை அதிகாரிக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலய இணைப்பதிகாரி ரோஹித்த பிரியதர்ஸன தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதம் பதிவு தபால் மூலமாக கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் குறித்த கார் சிக்குண்டது.

காரை செலுத்திய சாரதி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் வெளியேறி உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read more

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read more

திருகோணமலை மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 734 பேரும், 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுதாஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்தங்கள் குறித்து இன்று கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 282 நபர்கள் உறவினர்களின் வீட்டில் தங்கி இருப்பதாகவும் Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வருகின்ற தொடர் மழையினால் 8 பிரதேச செயலகங்களில் 18 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

2 வாரங்களுக்குள் 9953 குடும்பங்களைச் சேர்ந்த 33,288 பேர் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 39 வீடுகள் பகுதி அளவிலும் ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. Read more

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 164 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களை இன்று வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து கொண்டார். Read more

கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையம் இன்று நீரில் மூழ்கியுள்ளதாக கிளிநொச்சி இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை மத்திய நிலையத்தின் மேசைகள் மற்றும் கதிரைகள் இருந்த கீழ் மாடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். Read more

குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சாப்தீனின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரியுள்ளார்.

வைத்தியருக்கு எதிராக விசாரணைகளை நடத்திய அதிகாரி குறித்த வைத்தியர் மீதான குற்றச்சாட்டுகளை தவறவிட்டதாக அவர் கூறியுள்ளார். Read more