திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 164 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களை இன்று வெருகல் பிரதேச செயலாளர் கே.குணநாதன் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இடம்பெயர்ந்தவர்களில் மாவடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த 23 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இடைத்தங்கள் முகாமிலும், வட்டவான், சேனையூர், மாவடிச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 89பேர் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

அதேவேளை பாடசாலையில் தங்கியுள்ளவர்களுக்கு வெருகல் பிரதேச செயலகத்தினால் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் வெருகல் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார். அதேவேளைத் தொடர்ந்தும் வெள்ளநீர் வழிந்தோடாது வீடுகள் மற்றும் வீதிகளில் நிறைந்து காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.