குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சாப்தீனின் சொத்து விபரத்தை நியாயப்படுத்திய அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரியுள்ளார்.

வைத்தியருக்கு எதிராக விசாரணைகளை நடத்திய அதிகாரி குறித்த வைத்தியர் மீதான குற்றச்சாட்டுகளை தவறவிட்டதாக அவர் கூறியுள்ளார். உர மானியத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.