கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையம் இன்று நீரில் மூழ்கியுள்ளதாக கிளிநொச்சி இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை மத்திய நிலையத்தின் மேசைகள் மற்றும் கதிரைகள் இருந்த கீழ் மாடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், விரைந்து செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் மேசைகள் மற்றும் கதிரைகளை மேல் மாடிக்கு கொண்டு சென்று பரீட்சை நிலையத்தை மேல் மாடியில் அமைத்துள்ளனர்.

மேலும், பரீட்சை எழுத வந்த மாணவர்களை உழவு இயந்திரத்தை பயன்படுத்தி பரீட்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சை நிலையத்தை சுற்றி இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் கிளிநொச்சி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி ஹிந்து வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையம் நீரில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மாணவர்களை படகுகளின் மூலம் பரீட்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவர்களின் பாதுகாப்பிற்காக இராணுவ அதிகாரிகள் பாடசாலையை சுற்றி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பாதுகாப்பு படை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கிளிநொச்சி பாதுபாப்பு படை தளபதி மேஜர் ஜெனரால் ஜி.வி.ரவிபிரியவின் ஆலோசனையின் படி கிளிநொச்சி இராணுவ அதிகாரிகள் நிவாண உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.