Header image alt text

கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேர் நிலப்பகுதி இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நாட்டுக்கு புதிதாக இணையும் இந்த நிலப்பரப்பிற்காக நிறைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த போது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின்க் தலைமையில் இந்த துறைமுக நகர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு அமுலாகும் துறைமுக விஸ்தரிப்பு வேலைத்திட்டத்திற்கென ஒரு பில்லியன் ஜப்பான் யென்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் இன்றுகாலை கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்வராஜா சினியோன் (04வயது) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

50 ஆயிரம் உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்வைத்துள்ள யோசனை ஊடாக ஆசிரியர் சேவை யாப்பு முழுவதுமாக மீறப்படுவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செயன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ள நிலையில், இதனூடாக ஆசிரியர் சேவையின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒருவர் நேற்று கைதாகியுள்ளார்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைதொகுதி ஒன்றில் குறித்த பிரஜை கடவுச்சீட்டு மற்றும் விசா ஏதுவும் இன்றி சந்தேகத்திற்கிடமாக தங்கியிருப்பதாக புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து கைதாகியுள்ளார். Read more

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ-பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

பாதிப்படைந்திருந்து ரயில்வே சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. நேற்று மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, தண்டவாளத்தில் சரிந்து விழுந்திருந்த மண்மேடு அகற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் 04.12.2019 புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான திரு. தொல். திருமாவளவன் அவர்களினால் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது மூன்று புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தோழர் ஜெகநாதன் அவர்கள் உட்பட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜெர்மன் கிளையினரும் கலந்துகொண்டதோடு, தோழர் ஜெகநாதன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து தோழர் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் கட்சியின் ஜெர்மன் கிளையினர் தொல் திருமாவளவன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். Read more

கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. Read more

13ஆவது தெற்காசிய விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவென நேபாளம் சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேபாளத்தின் காத்மண்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Read more