ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் 04.12.2019 புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தின் பிரபல அரசியல்வாதியான திரு. தொல். திருமாவளவன் அவர்களினால் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது மூன்று புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் தோழர் ஜெகநாதன் அவர்கள் உட்பட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜெர்மன் கிளையினரும் கலந்துகொண்டதோடு, தோழர் ஜெகநாதன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து தோழர் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் கட்சியின் ஜெர்மன் கிளையினர் தொல் திருமாவளவன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.