13ஆவது தெற்காசிய விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளவென நேபாளம் சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேபாளத்தின் காத்மண்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தனியார் மருத்துவமனை என்பதால் சிகிச்சைக்கு அதிக பணம் செலவிடப்படுவதுடன் சகல செலவுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சே பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள இவர்களை 4மணித்தியாலயங்களுக்கும் மேற்பட்ட விமான பயணத்தில் அனுப்பிவைப்பது சிக்கலுக்குரிய விடயமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.