Header image alt text

ஜேர்மனியிலுள்ள மூன்று தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ என்ற நுல் அறிமுக விழாவினை நேற்றையதினம் (07.12.2019) நடாத்தியிருந்தன.

இலங்கையர் ஜனநாயக முன்னணி, தமிழ் மரபு அறக்கட்டளை, இலங்கை ஜேர்மன் நட்புறவு கழகம் ஆகியன இணைந்தே இந்நிகழ்வினை நடாத்தியிருந்தன. டொக்டர் சுபாசினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினருடன் தோழர் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜெர்மன் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கல்யா பெரிஸ்டர் பிரான்ஸிஸ் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேலாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மார்கழி 09ம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அவர் Read more

புதிய இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அந்த பதவியை மேஜர் ஜெனரால் சுமித் அத்தபத்து வகித்திருந்தார். இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் புதிய இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க செயற்படவுள்ளார்.

தேசிய புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

கிளிநொச்சி அக்கராயன்குளம் கந்தபுரம் பகுதியில் இன்றுகாலை தென்னை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது.

இதன்போது ஒரு வயதும் இரண்டு மாதங்களுமேயான எஸ்.தஸ்மியா என்ற குழந்தையே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறித்த குழந்தையை அவரது அம்மம்மா வீட்டிற்கு அருகில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. Read more

திருகோணமலை கிண்ணியா உப்பாறு பாலத்திற்கு அருகில் மாகாவலி கங்கையில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணி தொடர்கிறது.

அவர்களை தேடும் பணியில் காவற்துறையினர் மற்றும் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இன்றுகாலை குறித்த பகுதியில் படகில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. Read more

ரயில்வே முகாமைத்துவ பணிகளுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் 20 ரயில்களுக்கு இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரயில் போக்குவரத்தில் நிகழும் காலதாமதங்களை இத்தொழில்நுட்பம் மூலம் விரிவாக அறிவிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Read more

எதிர்வரும் குளிர்காலத்தின் போது சுற்றுலாப்பிரயாணம் மேற்கொள்ளக்கூடிய உலகின் சிறந்த வெப்பமான 20 நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தை பிடித்துள்ளது. யூ.எஸ்.ஏ டு டே இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து, தாய்லாந்து, பிரேசில், மெக்ஸிக்கோ, இந்தேனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம், வியட்னாம், தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட 19 நாடுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. Read more

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததுடன், 6 காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடர்வதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more