கிளிநொச்சி அக்கராயன்குளம் கந்தபுரம் பகுதியில் இன்றுகாலை தென்னை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது.

இதன்போது ஒரு வயதும் இரண்டு மாதங்களுமேயான எஸ்.தஸ்மியா என்ற குழந்தையே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறித்த குழந்தையை அவரது அம்மம்மா வீட்டிற்கு அருகில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தையின் அம்மம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.