வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததுடன், 6 காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடர்வதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அடைமழையுடனான சீரற்ற காலநிலை தொடருமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்துவரும் சில தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் 17 மாவட்டங்களுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.