திருகோணமலை கிண்ணியா உப்பாறு பாலத்திற்கு அருகில் மாகாவலி கங்கையில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணி தொடர்கிறது.

அவர்களை தேடும் பணியில் காவற்துறையினர் மற்றும் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இன்றுகாலை குறித்த பகுதியில் படகில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் திடீரென படகு கவிழ்ந்துள்ளது.இதில் ஒருவர் பலியானதுடன் ஏனைய இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.