Header image alt text

அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர – நீர் வழங்கல் வசதிகள்.
02. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க – நகர அபிவிருத்தி.
03. எஸ். சேனாநாயக்க – நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி. Read more

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஸ்கேடாய் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது, புதிய பிரதமராக தெரிவான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவுஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் மேற்படி உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். Read more

மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு தமது நாடுகளின் ஒத்துழைப்புகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதோடு பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைக்காக எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தாம் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். Read more

ஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை இன்று நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்களின் கூட்டத்தின் போது (MSP)), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வெளிச்செல்லும் தலைவரான பிரான்சின் தூதுவர் யன் ஹ்வாங்கிடமிருந்து, 2020 அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கின்றார். Read more

பல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுவதால், அதனை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அரை சொகுசு பஸ்களின் ஜன்னல்களில் திரைச்சீலையை தொங்கவிட்டுள்ளமை மாத்திரமே பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஒரே வசதி என்று சுட்டிக்காட்டியுள்ளார். Read more

யாழ். வடமராட்சி துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இரண்டரை வயதுச் சிறுவன் நேற்று இரவு 11.30 மணியளவில் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை இரவு கடமைகளுக்காகச் சென்றிருந்த நிலையில் தாயாருடன் குறித்த சிறுவன் உறங்கியுள்ளான். இந்நிலையில் சிறுவனை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணவில்லை எனத் தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். Read more

சமீபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

பின் இரண்டாவது முறையாகவும் அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். நேற்றைய தினம் குறித்த பெண் அதிகாரி சுமார் 9 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக, Read more

நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமொன்றை செயற்படுத்துவதை தடுத்து விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் 20ம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது. Read more