சமீபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

பின் இரண்டாவது முறையாகவும் அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். நேற்றைய தினம் குறித்த பெண் அதிகாரி சுமார் 9 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக, மேற்படி திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்திருந்தது. இதேவேளை சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.