யாழ். வடமராட்சி துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இரண்டரை வயதுச் சிறுவன் நேற்று இரவு 11.30 மணியளவில் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை இரவு கடமைகளுக்காகச் சென்றிருந்த நிலையில் தாயாருடன் குறித்த சிறுவன் உறங்கியுள்ளான். இந்நிலையில் சிறுவனை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணவில்லை எனத் தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார் கொலையுண்ட சிறுவனின் தந்தையையும், தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருகின்றனர்.