எல்.என்.ஜி எனப்படும் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அந்நாட்டு தூதுவர் அகிரா சுகியாமா தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜப்பான் தூதுவர் இடையே நேற்றையதினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கெரவலபிடியவில் அமைக்கப்பட்டு வரும் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலைய பணிகளில் ஏற்பட்டுள்ள தாமத நிலை தொடர்பில் அமைச்சர் தமது கவலையை வெளியிட்டதோடு, இருப்பினும் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜப்பான் தூதுவரிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்