கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி 3 ஆவது நாளாக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இதேவேளை, கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி நேற்று இரவு 10 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதற்கமைய அவர் 2 வது நாளாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த சுவிஸ் பெண் அதிகாரி சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு நேற்று அனுப்பி வைத்தனர்.
அதற்கமைய அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடையை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிப்பதற்கும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.