முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உலக மனித உரிமைகள் தினமான இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1008வது நாளாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றுதிரண்டு இன்று கவனயீர்ப்ப போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு ராயப்பர் தேவாலயத்துக்கு முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் மக்களிடம் ஐக்கிய நாடுகளுக்கான மகஜரைப் பெற்று அதனை உரிய தரப்பிற்கு அனுப்புவதாக தெரிவித்தார்.