முல்லைத்தீவு மல்லாவியில், இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 25 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் கூறியுள்ளனர். இதில் காயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.