Header image alt text

அரை சொகுசு ரக பேருந்து சேவைகளை இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு தமது சங்கம் எந்தவித எதிர்ப்பையும் வெளியிட போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். அரை சொகுசு ரக பேருந்துகளுக்கு பதிலாக சொகுசு ரக பேருந்துக்களை எதிர்காலத்தில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.என்.ஜி எனப்படும் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அந்நாட்டு தூதுவர் அகிரா சுகியாமா தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜப்பான் தூதுவர் இடையே நேற்றையதினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, Read more

சிவனொளிபாத மலை யாத்திரிகை காலம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைய சமன் தெய்வ சிலை மற்றும் புனித பொருட்கள் இன்று மலை உச்சியில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளன.

பெல்மடுல்ல கல்பொத்தாவல ரஜமகா விஹாரையில் நேற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தற்போது சமன் தெய்வத்தின் உருவச்சிலை மற்றும் ஏனைய புனித சின்னங்கள் அங்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. Read more

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார், 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பியிருந்தார். Read more