உயர்தரத்தில் சித்தியடைந்திருந்த போதிலும் பல்கலைக்கழக வாய்பை பெறாத மாணவர்களுக்கு தொழிநுட்பவியல் சார்ந்த பட்டம் ஒன்றை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.