யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்சாட்டப்பட்டுள்ள ஆறு எதிரிகளுக்கெதிரான குற்றப் பத்திரிகையை, விளக்கம் நடாத்தமாலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற எதிரிகள் தரப்பு விண்ணப்பத்தை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், நேற்று (10) நிராகரித்தார்.

அத்துடன், எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகள் விடயத்தில், தேவையற்ற தடங்கல்களை ஏற்படுத்தாது, வழக்கை விரைவாக நடவடிக்கைக்குட்படுத்த வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி வழக்கை டிசெம்பர் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.