அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43/1 , 46/1 ஆம் பிரிவுகளின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

29 அமைச்சுப் பதவிகளுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதியின் கீழ் உள்ள அரச அச்சக திணைக்களம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சின் விடயதானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

1990 சுவசெரிய சேவை இந்த வர்த்தமானியின் ஊடாக சுகாதார அமைச்சின் விடயதானங்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் விடயதானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஊழியர் சேமலாப நிதியம், திறன் மேம்பாட்டு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் விடயதானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.