சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இ​டையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

ஆட்கடத்தலுக்கு எதிராக சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ​செய்து கொள்ளப்பட உள்ளது.

குறித்த கலந்துரையாடலுக்காக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்து அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்