திட்டமிட்டு கருத்தடை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் முஹமது ஷாஃபி ஷிஹாப்தீனிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, புதியக் குழுவொன்று நியமிக்கப்படுமென, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், (சி.ஐ.டி) நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.

வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக வழக்கு, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.