பிரிட்டனில் நேற்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படையில் 344 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 201 இடங்களில் தொழிலாளர் கட்சியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

அதேபோல் 1935 ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.