இலங்கை பொலிஸில் கடமையாற்றும் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்க புதிய நடைமுறையை தயாரித்து அதனை உடனடியாக அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ உதவி பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் கருத்திட்டத்திற்கமைய பாதுகாப்பு சேவையில் பதவி உயர்வுகளை வழங்கும் போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை ஆராய்ந்து அதற்கேற்ற புதிய முறைகளை அறிமுகப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

அதற்கிணங்க தகுதியுடைய அதிகாரிகளுக்கு முறையான பதவி உயர்வுகளை வழங்கும் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த நடைமுறை எதிர்காலத்திலும் பதவி உயர்வுகளின் போது பின்பற்றப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.