புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அது ஈழ தமிழர்களுக்கு எதிரானதாக அமைந்துவிடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது இலங்கை தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர், ஈழத் தமிழர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் பா.ம.க தொடர்ந்தும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

எனினும் கூட்டணி தர்மத்தின்படியே புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணியில் இருப்பதால் அனைத்து சட்டங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டுமா என இதன் போது ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர் கூட்டணியில் இருந்தால் அனைத்தையும் ஆதரித்து செல்ல வேண்டியது கட்டாயம் என கூறினார்.