ஐ.எஸ். தீவிரவாத ஸஹ்ரானின் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் CID யினரால் கைது செய்யப்பட்டுகொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டு காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் பிரிவு பரீட் அகமட் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய முகமது நபீல் யசீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த இளைஞரும் அவது சகோரரும் ஐ.எஸ் தீவிரவாத ஸஹ்ரானின் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றனர் என CID யினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞன் தலையில் ஏற்பட்ட நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞனின் சடலத்தை உறவினர்கள் சென்று பெறுப்பேற்றே நேற்று காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டிற்கு சடலம் கொண்டுவரப்பட்டு பின்னர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்