இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடைதற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதாக மூவரங்கிய கொழும்பு நிரத்தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சதோச நிறுவனத்தின் ஊடக 1400 கெரம்போட்கள் மற்றும் 11000 தாம் போட்களை இறக்குமதி செய்து அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியமையின் மூலம் அரசாங்கத்திற்கு 5 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்.குருசிங்க, சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் மன்றில் ஆஜான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி தனது கட்சிக்காரர் இந்த மாதம் சிகிச்சைகளுக்காக சிங்கபூர் செல்ல வேண்டியுள்ளதால் தற்போது நடைமுறையில் உள்ள வெளிநாட்டு பயண தடையை குறித்த காலப்பகுதியில் நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த வேண்டுகோள் தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிகிச்சைக்காக செல்லும் காத்தில் பயண தடையை தற்காலிகமாக நீக்குவதாக உத்தரவிட்டது.

அதேபோல் அவருக்கு அடுத்த 25 ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.