ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தலைவராக அசோக் பத்திரனகே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நாட்டின் பிரபல வியாபாரியான அவர், தற்போது ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைவராகவும் பணிப்பாளர் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எஸ்.எம் மொஹமட் இதற்கான நியமனக்கடிதத்தை வெளியிட்டுள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி முதல் இவரது நியமனம் அமுல் படுத்தப்பட்டுள்ளது