இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயபுரத்தில் வைத்து இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். ஜெயலலிதா காலத்திலேயே பொதுக்குழுவில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.

இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் அந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்