கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,37,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.