அரச பிரதான மற்றும் அரச நிதி முகாமைத்துவ செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காகஉலக வங்கி இலங்கை அரசுக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்க அனுமதியளித்துள்ளது.

இந்த பொதுத் துறையின் செயல்திறனை வலுப்படுத்தும் திட்டம் (Public Sector Efficiency Strengthening Project – PSEP) நிறுவன திறனை வலுப்படுத்துவதற்கு, செயல்திறனை மேம்படுத்துவற்கு மற்றும் மிகவும் சிறந்த சேவைகளை வழங்குவதற்கு உதவும் என்று உலக வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த கடன் 28 வருட மீள் செலுத்தும் காலத்தை கொண்டுள்ளதுடன் 11 வருட நிவாரண காலத்தை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.