72 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் அடுத்த வருடம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 72 ஆவது தேசிய தின விழாவின் நிகழ்ச்சி நிரலை வகுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரை தலைவராக கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று 72 ஆவது தேசிய தின விழா கொழுப்பு 07, சுதந்திர சதுர்க்கத்தில் நடத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கபட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)